அணிந்துரை பழப்பயிர்களில், ஊட்டச்சத்து மிக்க வாழை மற்றும் பப்பாளி சாகுபடி பரப்பளவு நாளுக்கு நாள் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்பயிர்களின் சாகுபடி முறைகளை அறிந்துகொள்வதில் விவசாயிகள் மற்றும் மாணவர்கள் அதிகம் முனைப்பு...
அணிந்துரை பழப்பயிர்களில், ஊட்டச்சத்து மிக்க வாழை மற்றும் பப்பாளி சாகுபடி பரப்பளவு நாளுக்கு நாள் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்பயிர்களின் சாகுபடி முறைகளை அறிந்துகொள்வதில் விவசாயிகள் மற்றும் மாணவர்கள் அதிகம் முனைப்பு காட்டி வருகின்றனர். இப்புத்தகத்தில் வாழை மற்றும் பப்பாளி சாகுபடி முறைகள் மற்றும் பயிர்பாதுகாப்பு பற்றி தெளிவான படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் (ICAR - AICRPCF) இயங்கும் பழப்பயிர்கள் துறையில் பல வருடங்களாக நடைபெற்ற ஆராய்ச்சிகளின் மூலமும், இப்பயிர் விவசாய நிலங்களை பார்வையிட்டதன் மூலம் பெற்ற அனுபவ அறிவின் அடிப்படையிலும் இப்புத்தகம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் விரிவாக்க வல்லுனர்களுக்கு வாழை மற்றும் பப்பாளி பற்றிய சந்தேகக்களுக்கு உரிய விளக்கம் வரும் என்பதில் ஐயமில்லை. இப்புத்தகத்தை உருவாக்க உதவிய தமிழ்நாடு வேளாண்ப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக ஆசிரியர்கள் ஆகியோர்க்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.